அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 001

களிற்றியானை நிரை


களிற்றியானை நிரை

பிரியலம்‌ என்ற சொல்‌!

பாடியவர்‌ : மாமூலனார்‌.
திணை : பாலை.
துறை : தலைவி கூற்று - பிரிவிடை ஆற்றாளாய தலைமகள்‌ தோழிக்குச்‌ சொல்லியது.

(காதலன்‌ பிரிந்து சென்றதனால்‌ ஆற்றாமை மிகுந்தவள்‌ ஆயினாள்‌ தலைவி. அவள்‌ தன்‌ தோழிக்குத்‌, தன்‌ ஆற்றாமை மிகுதி புலப்படக்‌ கூறியது இது. "யான்‌ வாடக்‌" காடு கடந்து செல்வந்‌ தேடச்‌ சென்றவர்‌, தாம்‌ முன்‌ சொன்ன "பிரியலம்‌" என்ற தம்‌ உறுதிச்‌ சொல்லையும்‌ பொய்த்தனரே என அவள்‌ வருந்துகின்றாள்‌.)

'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய . . . . [05]

கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்
மறந்தனர் கொல்லோ தோழி! சிறந்த
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், . . . . [10]

நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை . . . . [15]

நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?
- மாமூலனார்.

பொருளுரை:

தோழி! சிறப்புடைய மூங்கிலைப்‌ போன்ற பணைத்த எம்‌ தோள்களும்‌ நெகிழுமாறு, எமக்குத்‌ தொலைவிலுள்ள நாட்டுப்‌ பொன்னணிகள்‌ ஆகிய செல்வங்களைக்‌ கொணர்ந்து தருவதற்காக, அவர்‌ எம்மைப்‌ பிரிந்து போயினரே!

தரையெங்கும்‌ வெடிப்புக்கள்‌ ஏற்படுமாறு, வெம்மையான கதிரவன்‌ நெருப்பினைப்‌ போல எங்கும்‌ பசுமையற்றுப்‌ போகுமாறு எரித்தலினால்‌, தம்‌ நிழல்‌ தேய்ந்து உலறிப்‌ போன மரங்களை உடையது; பாறைகளும்‌ கொதிக்கும்படியாக நீரற்றுப்போன பசுஞ்சுனைகள்‌, நீர்ப்பசையே அற்றுக்‌ காய்ந்து போனதனால்‌, சொரிந்த நெல்‌ பொரியாகப்‌ போகும்‌ அளவுக்குக்‌ கொடிய வெம்மையினையும்‌ உடையது; யாவரும்‌ அவ்வழியாக வருபவர்‌ இல்லாததனால்‌, வழிப்‌ பறித்து உண்டு வாழ்பவரும்‌ தமக்கு ஏதும்‌ கிடையாதாராகிப்‌ பசியினால்‌ மடிய, அச்சுரம்‌ தன்‌ அழகிழந்து போனதாகிக்‌ கிடக்கின்றது. அசைகின்ற கிளைகளை யுடைய, நாரற்ற முருங்கையின்‌ உச்சியிலே இருந்த வெண்மை யான பூக்கள்‌, சூரைக்‌ காற்றாகிய கடுங்காற்று எடுத்துச்‌ சிதற எங்கும்‌ உதிர்ந்து பரவிச்‌ சிதறி, கரையிலே மோதி உடைந்து அலைகள்‌ பொங்கிச்‌ சிதறுவதைப்‌ போலக்‌ கிடக்கும்‌ கடல்‌ முகப்புப்‌ போல, அக்‌ காட்டின்‌ முகப்பும்‌ தோன்றும்‌. அத்தகைய கொடிய காட்டையும்‌ கடந்து அவர்‌ சென்றனரே!

அப்படிச்‌ சென்ற அவர்‌, “வண்டினம்‌ மொய்த்துச்‌ சிதறு மாறு, புதிய பூக்கள்‌ தொடுத்த கண்ணியைச்‌ சூடிக்‌, கால்களிலே ஒள்ளிய வீரக்‌ கழல்கள்‌ ஒலிமுழங்க, அஞ்சத்தக்க குதிரைகளை உடைய மழவர்களை வெருட்டி ஓட்டிய, முருகப்‌ பெருமானைப்‌ போன்ற நல்ல பேராற்றலையுடைய நெடுவேள்‌ ஆவியின்‌, அறுத்துத்‌ திருத்திய கொம்புகளையுடைய போர்‌ யானைகள்‌ மலிந்த பொதினி மலையினிடத்தே, “சாணைக்கல்‌ செய்யும்‌ சிறுவன்‌ அரக்கோடு சேர்த்து இயற்றிய கல்போல, யாமும்‌ என்றும்‌ நின்னைப்‌ பிரியமாட்டோம்‌” என்று, தாம்‌ முன்னர்‌ எமக்குக்‌ கூறிய அந்த உறுதிச்‌ சொற்களையும்‌ மறந்து விட்டனரோ, தோழி?

சொற்பொருள்:

1. ததைந்த - சிதறின; மலர்ந்த. 2. உருவக்‌ குதிரை - உட்கத்தக்க குதிரை. 4. அறுகோடு - அறுத்துத்‌ திருத்தின கோடு; சிங்கத்தை வென்ற கோடும்‌ ஆம்‌. பொதினி - அவியின்‌ மலை. 5. காரோடன்‌ - பணையான்‌. பயின்‌ - அரக்கு. 6. கல்‌ சாணை; அரக்குங்‌ கல்லும்‌ சேர்த்தியபின்‌ பிரிக்க ஒண்ணாது; அதுபோலச்‌ சேர்ந்த யாமும்‌ பிரியோம்‌ என்றனன்‌. 9. வெறுக்கை - செல்வம்‌. 11. உலறிய - பட்டுப்போன. 14. வெளவுநர்‌ - ஆறலை கள்வர்‌. 17. சூரல்‌ - சுழித்து அடித்தல்‌. 18,79 முன்‌ கடல்‌ - கடல்‌ முன்‌.