அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 327

நித்திலக் கோவை


நித்திலக் கோவை

பாலை - தலைமகன் கூற்று

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது.

'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும்,
நன்பகல் அமையமும் இரவும் போல,
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து,
உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம்
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப, . . . . [05]

துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே!
நீ செல வலித்தனைஆயின், யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர்
ஆவி அவ் வரி நீர் என நசைஇ,
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை, . . . . [10]

களர் கால் யாத்த கண் அகல் பரப்பின்
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின்
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின்,
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த,
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை . . . . [15]

பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச்
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர்,
கோல் கழிபு இரங்கும் அதர,
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே?
- மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்.