அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 269
மணிமிடைபவளம்
மணிமிடைபவளம்

பாலை - தோழி கூற்று
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க!
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக!
ஏறுடை இன நிரை பெயர, பெயராது,
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறுமார், . . . . [05]
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி,
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் . . . . [10]
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால்
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்,
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் . . . . [15]
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர,
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப,
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ,
திரு நுதல் மகளிர் குரவை அயரும் . . . . [20]
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின்
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
ஒண் செங் கழுநீர் அன்ன, நின்
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே . . . . [25]
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக!
ஏறுடை இன நிரை பெயர, பெயராது,
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறுமார், . . . . [05]
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி,
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் . . . . [10]
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால்
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்,
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் . . . . [15]
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர,
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப,
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ,
திரு நுதல் மகளிர் குரவை அயரும் . . . . [20]
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின்
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
ஒண் செங் கழுநீர் அன்ன, நின்
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே . . . . [25]
- மதுரை மருதன் இளநாகனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
தொடிதோள் இவர்க! எவ்வமுந் தீர்க!
நெறிஇருங் கதுப்பின் கோதையும் புனைக!
ஏறுடை இனநிரை பெயரப்; பெயராது
செறிசுரை வெள்வேல் மழவர்த் தாங்கிய
தறுக ணாளர் நல்லிசை நிறுமார், . . . . [05]
பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்
அகலிடம் குயின்ற பல்பெயர் மண்ணி,
நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய
அம்புகொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின் . . . . [10]
செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரிவண்டு ஆர்ப்பச் சூட்டிக் கழற்கால்
இளையர்பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்,
பொலங்காசு நிரைத்த கோடுஏந்து அல்குல் . . . . [15]
நலம்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வரப்,
பாடுஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து
வயிர்இடைப் பட்ட தெள்விளி இயம்ப
வண்டற் பாவை உண்துறை தரீஇத்,
திருநுதல் மகளிர் குரவை அயரும் . . . . [20]
பெருநீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி, வணங்குகதிர் நெல்லின்
யாணர்த் தண்பணைப் போதுவாய் அவிழ்ந்த
ஒண்செங் கழுநீர் அன்ன நின்
கண்பனி துடைமார் வந்தனர் விரைந்தே . . . . [25]
நெறிஇருங் கதுப்பின் கோதையும் புனைக!
ஏறுடை இனநிரை பெயரப்; பெயராது
செறிசுரை வெள்வேல் மழவர்த் தாங்கிய
தறுக ணாளர் நல்லிசை நிறுமார், . . . . [05]
பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்
அகலிடம் குயின்ற பல்பெயர் மண்ணி,
நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய
அம்புகொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின் . . . . [10]
செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரிவண்டு ஆர்ப்பச் சூட்டிக் கழற்கால்
இளையர்பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்,
பொலங்காசு நிரைத்த கோடுஏந்து அல்குல் . . . . [15]
நலம்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வரப்,
பாடுஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து
வயிர்இடைப் பட்ட தெள்விளி இயம்ப
வண்டற் பாவை உண்துறை தரீஇத்,
திருநுதல் மகளிர் குரவை அயரும் . . . . [20]
பெருநீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி, வணங்குகதிர் நெல்லின்
யாணர்த் தண்பணைப் போதுவாய் அவிழ்ந்த
ஒண்செங் கழுநீர் அன்ன நின்
கண்பனி துடைமார் வந்தனர் விரைந்தே . . . . [25]