அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 325

நித்திலக் கோவை


நித்திலக் கோவை

பாலை - தலைமகள் கூற்று

கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

அம்ம! வாழி, தோழி! காதலர்,
'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர்,
நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும்
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது . . . . [05]

இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி,
'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு கோள்
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை,
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு,
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம் . . . . [10]

வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய,
தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல்,
ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்;
சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள்,
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ, . . . . [15]

எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது,
நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை,
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை,
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலைப் போகி, . . . . [20]

ஒழியச் சென்றோர்மன்ற;
பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே?
- மாமூலனார்.