அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 375
நித்திலக் கோவை
நித்திலக் கோவை

பாலை - தலைமகன் கூற்று
பிரிவிடை வேறுபட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது.
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின்
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர்
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலை, . . . . [05]
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல்,
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன் . . . . [10]
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும், . . . . [15]
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின்,
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே.
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர்
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலை, . . . . [05]
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல்,
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன் . . . . [10]
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும், . . . . [15]
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின்,
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே.
- இடையன் சேந்தங் கொற்றனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
சென்று நீடுநர் அல்லர்; அவர்வயின்
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
அம்புதொடை அமைதி காண்மார் வம்பலர்
கலனிலர் ஆயினும் கொன்றுபுள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலைக் . . . . [05]
கணநரி இனனொடு குழீஇ நிணனருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசிவிரல்
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரைசேர் யாத்த வெண்திரள் வினைவிறல்
எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன் . . . . [10]
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்
செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும் . . . . [15]
அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம் இறந்தோர்
நோயிலர் பெயர்தல் அறியின்
ஆழல மன்னோ தோழி! என் கண்ணே
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
அம்புதொடை அமைதி காண்மார் வம்பலர்
கலனிலர் ஆயினும் கொன்றுபுள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலைக் . . . . [05]
கணநரி இனனொடு குழீஇ நிணனருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசிவிரல்
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரைசேர் யாத்த வெண்திரள் வினைவிறல்
எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன் . . . . [10]
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்
செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும் . . . . [15]
அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம் இறந்தோர்
நோயிலர் பெயர்தல் அறியின்
ஆழல மன்னோ தோழி! என் கண்ணே