அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 378

நித்திலக் கோவை


நித்திலக் கோவை

குறிஞ்சி - தலைமகள் கூற்று

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது.

'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்,
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள,
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர,
காமர் பீலி ஆய் மயில் தோகை . . . . [05]

வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக்
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல
ஆடு கள வயிரின் இனிய ஆலி,
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து,
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் . . . . [10]

பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும்,
உடன்ற அன்னை அமரா நோக்கமும்,
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச்
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு
குட கடல் சேரும் படர் கூர் மாலையும், . . . . [15]

அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி,
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி!
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர்
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு
அள் இலைப் பலவின் கனி கவர் கைய . . . . [20]

கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து,
பாடு இன் அருவி சூடி,
வான் தோய் சிமையம் தோன்றலானே.
- காவட்டனார்.