அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 372

நித்திலக் கோவை


நித்திலக் கோவை

குறிஞ்சி - தலைமகன் கூற்று

அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப,
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை,
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண்,
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து, . . . . [05]

வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்,
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல்,
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி,
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் . . . . [10]

ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்,
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா,
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர்
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து, . . . . [15]

ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே.
- பரணர்.