அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 259

மணிமிடைபவளம்


மணிமிடைபவளம்

பாலை - தோழி கூற்று

உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.

வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;
தாரும் தையின; தழையும் தொடுத்தன;
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக்
குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர் . . . . [05]

வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன்
தேம் படப் பொதுளின பொழிலே; கானமும்,
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்,
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
போது வந்தன்று, தூதே; நீயும் . . . . [10]

கலங்கா மனத்தை ஆகி, என் சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி!
தெற்றி உலறினும், வயலை வாடினும்,
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்,
நின்னினும் மடவள் நனி நின் நயந்த . . . . [15]

அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர்
புலி மருள் செம்மல் நோக்கி,
வலியாய் இன்னும்; தோய்கம், நின் முலையே!
- கயமனார்.