அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 224

மணிமிடைபவளம்


மணிமிடைபவளம்

முல்லை - தலைமகன் கூற்று

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

செல்க, பாக! எல்லின்று பொழுதே
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா,
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை,
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி, . . . . [05]

பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன,
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி,
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக,
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில், . . . . [10]

தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல்
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ,
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என, . . . . [15]

சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால்
அருங் கடி வியல் நகர் நோக்கி,
வருந்துமால், அளியள் திருந்திழைதானே.
- ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்.