அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 002
களிற்றியானை நிரை
களிற்றியானை நிரை
கங்குல் வருதலும் உரியை!
பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி கூற்று - பகற்குறிக் கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது.
சிறப்புற்றோன் : பொதினித் தலைவன் நெடுவேள் அவி.
(தன் தலைவியைச் சந்திக்கப் பகற்குறியிடத்தே வருகின்றான் ஒரு தலைவன். அவனுக்குத் தலைவி இற் செறிக்கப்பட்ட செய்தியைக் கூறி, விரைய அவளை மணம் வேட்டு வருமாறு தோழி அறிவுறுத்துகின்றாள்.)
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது . . . . [05]
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? . . . . [10]
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள்ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் . . . . [15]
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
ஊழுறு தீங்கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது . . . . [05]
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல்வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய? . . . . [10]
வெறுத்த ஏஎர், வேய்புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு
இவளும், இனையள் ஆயின், தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை; பைம்புதல் . . . . [15]
வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன;
நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே!
பொருளுரை:
வளமையான இலைகளையுடைய வாழையின் காய்கள் மிகுதியாக விளங்கும் பெருங்குலையில், தாமாகவே முதிர்ந்து பழுத்த இனிமையான வாழைக் கனிகள், உண்ணுபவர்களைத் தம் இனிமை மிகுதியினால் திகட்டச் செய்து அதிகமாக உண்ணாதபடி தடுக்கும் சாரற் பலாவின் இனிய சுளைகள், முறைமைப்பட்ட பாறைக்கண் அமைந்த நெடிய சுளையின் நீர், நன்கு விளைந்த நறுந்தேன் அகியவற்றை எல்லாம், தன் அறியாமையினால் அடுத்தடுத்து உண்ட ஓர் அண் குரங்கானது, அதன் பக்கத்தே மிளகுக் கொடிகள் படர்ந்து வளர்ந்திருக்கும் சந்தன மரத்திலே ஏறுவதற்கும் முடியாதாகி, நறுமணமிக்க பூக்களாகிய படுக்கையிலே களிப்புடன் கிடந்து உறங்கும். இவ்வாறு, தாம் எதிர்பாராத இன்பத்தை நின் மலையகத்துப் பல்வேறு விலங்கினங்களும் எளிதாகப் பெற்று மகிழும். அத்தகைய மலை நாடனே! எதிர்பார்த்து வருகின்ற இன்பம் நினக்கு எவ்வாறு அரியதாகுமோ?
மிக்க அழகினை உடைய, மூங்கிலை நிகர்த்த பணைத்த தோள்களையுடைய இவளும், நிறுத்தவும் நில்லாது நின்னையே தொடர்கின்ற நெஞ்சத்தை உடையவளாக, நின்னிடத்தே இத்தகைய காதல் உடையவள் என்றால், இவளுடைய தந்தையின் அரிய காத்தல் தொழிலையுடைய காவலாளர் சோர்ந்திருக்கும் செவ்வியை மறைவாக அறிந்து, இரவிலே இரவுக்குறி நாடி வருவதற்கும் நீ உரியவனாவாய்!
அல்லாமலும், பசுமையான புதர்கள் சூழ்ந்த வேங்கை மரங்களும், ஒள்ளிய பூங்கொத்துக்கள் விரியப் பெற்றுள்ளன; மிக்க தண்மையான திங்களும் நிரம்புதலையுற்று இருக்கின்றது; அதனையும் நீதான் அறிவாயாக!
சொற்பொருள்:
1. கோழிலை - கொழுவிய இலை; கோள் காய். 3. ஊழ்படு - முறைமைப்பட்ட. 5. அறியாது உண்டல் உண்பதனால் கிளிமயக்கம் ஏற்படும் என்பதறியாது உண்டல். 6. கறிவளர் சாந்தம் ஏறாதென்றது, அக்காட்டு வளமும் கூறியதாகும். 7. வீ அடுக்கம் - பூப்படுக்கை. 8. குறியா இன்பம் முயற்சியும் உளப்பாடும் இன்றி வந்த இன்பம். 11. வெறுத்த - மிக்க. 14. சோர்பதன் - இகழ் பதம். 16. வேங்கை மலர்ந்தன என்றலால், தினை முற்றிய தனால் தலைவி இற்செறிப்புண்டாள் எனப் பகற்குறி மறுத்ததாம். 14. காவலர் சோர்பதன் ஒற்றி என்றலால், அது அருமையாதலை உணர்த்தி இரவுக் குறியாகிய அதுவும் மறுத்து வரைவு கடாயதாயிற்று. 17. திங்கள் நிரம்பிற்று என்றது, வளர்பிறை அன்றிக் கல்யாண நாட்கொள்ளாராகலின், அதுவும் ஆயிற்று என உணர்த்தி, வரைவு வேட்டதாகும்.
விளக்கம்:
“கடுவனின் அறியாமை போன்றே, நீயும் களவிலே கூடி, நின் அறநெறியையும் தப்பி, இக்களவினை நீங்கி வரையவுமாட்டாது, இதன்பாலே மயங்கா நின்றனை” என்று, குறிப்பால் தலைவனின் செயலைச் சுட்டிக் கூறியது எனவும் கருதலாம். “குறித்த இன்பம் நீ வரைந்துவரின் நினக்கு எங்ஙனம் அரியதாகும்?” என்று, தோழி, தலைவனுக்கு உறுதி கூறி வரைந்து வரத் தூண்டுகின்றாள்.






