அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 219

மணிமிடைபவளம்


மணிமிடைபவளம்

பாலை - நற்றாய் கூற்று

மகட் போக்கிய தாய் சொல்லியது.

சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி,
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்,
"வாராயோ!" என்று ஏத்தி, பேர் இலைப்
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல்
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி, . . . . [05]

"என் பாடு உண்டனைஆயின், ஒரு கால்,
நுந்தை பாடும் உண்" என்று ஊட்டி,
"பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து, யான்
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள்
அறனிலாளனொடு இறந்தனள், இனி" என, . . . . [10]

மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
"பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச்
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
பொரி அரை விளவின் புன் புற விளை புழல்,
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர் . . . . [15]

குழல் என நினையும் நீர் இல் நீள் இடை,
மடத் தகை மெலியச் சாஅய்,
நடக்கும்கொல்?" என, நோவல் யானே.
- கயமனார்.