அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 322
நித்திலக் கோவை
நித்திலக் கோவை

குறிஞ்சி - தலைமகன் கூற்று
அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு,
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்;
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப,
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர,
பாம்பு எறி கோலின் தமியை வைகி, . . . . [05]
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக்
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்,
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன்
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்,
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக் . . . . [10]
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல்,
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை,
புகல் அரும், பொதியில் போலப்
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே! . . . . [05]
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்;
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப,
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர,
பாம்பு எறி கோலின் தமியை வைகி, . . . . [05]
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக்
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்,
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன்
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்,
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக் . . . . [10]
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல்,
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை,
புகல் அரும், பொதியில் போலப்
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே! . . . . [05]
- பரணர்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
வயங்குவெயில் ஞெமியப் பாஅய் மின்னுவசிபு
மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் அடூஉநின்று அலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப்
பாம்புஎறி கோலிற் றமியை வைகி . . . . [05]
தேம்புதி கொல்லோ? - நெஞ்சே! உருமிசைக்
களிறுகண் கூடிய வாள்மயங்கு ஞாட்பின்
ஒளிறுவேல் தானைக் கடுந்தேர்த் திதியன்
வருபுனல் இழிதரு மரம்பயில் இறும்பிற்
பிறையுறழ் மருப்பின் கடுங்கண் பன்றிக் . . . . [10]
குறைஆர் கொடுவரி குழுமுஞ் சாரல்
அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்றுஅரு நெடுஞ்சிமைப்
புகலரும் பொதியில் போலப்
பெறலருங் குரையள்எம் அணங்கி யோளே! . . . . [15]
மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் அடூஉநின்று அலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப்
பாம்புஎறி கோலிற் றமியை வைகி . . . . [05]
தேம்புதி கொல்லோ? - நெஞ்சே! உருமிசைக்
களிறுகண் கூடிய வாள்மயங்கு ஞாட்பின்
ஒளிறுவேல் தானைக் கடுந்தேர்த் திதியன்
வருபுனல் இழிதரு மரம்பயில் இறும்பிற்
பிறையுறழ் மருப்பின் கடுங்கண் பன்றிக் . . . . [10]
குறைஆர் கொடுவரி குழுமுஞ் சாரல்
அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்றுஅரு நெடுஞ்சிமைப்
புகலரும் பொதியில் போலப்
பெறலருங் குரையள்எம் அணங்கி யோளே! . . . . [15]