அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 357

நித்திலக் கோவை


நித்திலக் கோவை

பாலை - தோழி கூற்று

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.

கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய,
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி,
வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து, . . . . [05]

புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது,
பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும்,
தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற்
பெருங் காடு இறந்தனர்ஆயினும், யாழ நின் . . . . [10]

திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி,
உள்ளாது அமைதலோ இலரே; நல்குவர்
மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
காலொடு துயல்வந்தன்ன, நின் . . . . [15]

ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே.
- எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்.