அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 365
நித்திலக் கோவை
நித்திலக் கோவை

பாலை - தலைமகன் கூற்று
தலைமகன் இடைச் சுரத்து நின்று சொல்லியது.
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப,
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை,
அத்த நடுகல் ஆள் என உதைத்த
கான யானைக் கதுவாய் வள் உகிர், . . . . [05]
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண்,
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை,
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு . . . . [10]
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல்
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்,
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
தண் கமழ் புது மலர் நாறும்
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே . . . . [15]
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை,
அத்த நடுகல் ஆள் என உதைத்த
கான யானைக் கதுவாய் வள் உகிர், . . . . [05]
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண்,
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை,
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு . . . . [10]
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல்
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்,
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
தண் கமழ் புது மலர் நாறும்
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே . . . . [15]
- மதுரை மருதன் இளநாகனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
அகல்வாய் வானம் ஆலிருள் பரப்ப
பகல்ஆற்றுப் படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை
அத்தம் நடுகல் ஆள்என உதைத்த
கான யானைக் கதுவாய் வள்ளுகிர் . . . . [05]
இரும்பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்
கடுங்கண் ஆடவர் ஏமுயல் கிடக்கை
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
என்றூழ் வெஞ்சுரம் தந்த நீயே!
துயர்செய்து ஆற்றா யாகிப் பெயர்பாங்கு . . . . [10]
உள்ளினை - வாழிய - நெஞ்சே! - வென்வேல்
மாவண் கழுவுள் காமூர் ஆங்கண்
பூதம் தந்த பொரியரை வேங்கைத்
தண்கமழ் புதுமலர் நாறும்
அஞ்சில் ஓதி ஆய்மடத் தகையே . . . . [15]
பகல்ஆற்றுப் படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை
அத்தம் நடுகல் ஆள்என உதைத்த
கான யானைக் கதுவாய் வள்ளுகிர் . . . . [05]
இரும்பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்
கடுங்கண் ஆடவர் ஏமுயல் கிடக்கை
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
என்றூழ் வெஞ்சுரம் தந்த நீயே!
துயர்செய்து ஆற்றா யாகிப் பெயர்பாங்கு . . . . [10]
உள்ளினை - வாழிய - நெஞ்சே! - வென்வேல்
மாவண் கழுவுள் காமூர் ஆங்கண்
பூதம் தந்த பொரியரை வேங்கைத்
தண்கமழ் புதுமலர் நாறும்
அஞ்சில் ஓதி ஆய்மடத் தகையே . . . . [15]