அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 387

நித்திலக் கோவை


நித்திலக் கோவை

பாலை - தோழி கூற்று

தலைமகளது குறிப்பு அறிந்து, தோழி தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது.

திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய்,
அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்!
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
பூக் கண் பறைந்த புன் தலைச் சிறாஅரொடு
அவ் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப் . . . . [05]

பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூந் துகில் இமைக்கும், பொலன் காழ் அல்குல்,
அவ் வரி சிதைய நோக்கி, வெவ் வினைப்
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ,
வரிப் புற இதலின் மணிக் கட் பேடை . . . . [10]

நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முட்
செங் கால், சேவல் பயிரும் ஆங்கண்,
வில் ஈண்டு அருஞ் சமம் ததைய நூறி,
நல் இசை நிறுத்த நாணுடை மறவர்
நிரை நிலை நடுகல் பொருந்தி, இமையாது, . . . . [15]

இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி
சிறிய தெற்றுவதுஆயின், “பெரிய
ஓடை யானை உயர்ந்தோர்ஆயினும்,
நின்றாங்குப் பெயரும் கானம்
சென்றோர்மன்” என இருக்கிற்போர்க்கே . . . . [20]
- மதுரை மருதன் இளநாகனார்.