குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 006

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த இடத்துஆற்றாளாகிய தலைவி,நள்ளிரவில் யாவரும் துயிலவும் யான் துயின்றிலேனென்று தோழி துயின்றமையைப் புலப்படுத்தி அவளுக்குக் கூறியது.

நள்ளென்றன்றே யாமம், சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்றி,
நனந்தலை உலகமும் துஞ்சும்,
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே!
- பதுமனார்.

பொருளுரை:

இடையிரவு செறிந்த இருளை உடையதாக இரா நின்றது; மனிதர் பேசுதலை ஒழித்து இனிமையாகத் துயின்றனர்; அகன்ற இடத்தை உடைய உலகத்தில் உள்ள எல்லாஉயிர்களும் வெறுப்பின்றித் துயிலா நிற்கும்; யான் ஒருத்தியே நிச்சயமாகத் துயிலேனாயினேன்.

முடிபு:

யாமம் நள்ளென்றன்று; மாக்கள் அடங்கினர்; உலகமும் துஞ்சும்; யான் ஒருத்தியே துஞ்சாதேன்.

கருத்து:

யாவரும் துயிலும் நள்ளிரவிலும் யான் துயின்றிலேன்.