குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 235
பாலை - தலைவன் கூற்று
பாலை - தலைவன் கூற்று
பாடல் பின்னணி:
வரைந்து கொள்வதற்கு முன் பிரிந்து சென்ற தலைவன், தலைவிபால் மீளும்போது வாடைக்குக் கூறுவானாகி, “வாடையே, அதோதெரிகின்றதே, அது தலைவியின் ஊர்; நீ அவளைப் பாதுகாப்பாயாக”என்று பாகனுக்கு உணர்த்தியது.
ஓம்புமதி வாழியோ வாடை! பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக்
கல் உயர் நண்ணியதுவே, நெல்லி
மரை இனம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே . . . . [05]
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக்
கல் உயர் நண்ணியதுவே, நெல்லி
மரை இனம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே . . . . [05]
- மரயேண்டனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின மாரு முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே . . . . [05]
தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின மாரு முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே . . . . [05]
பொருளுரை:
வாடைக் காற்றே நெல்லிக்காயை மரையின் திரள்உண்ணுகின்ற முன்னிடத்தை உடைய புல்லால் வேயப்பட்ட குடிசைகளை உடைய நல்ல தலைவியினது ஊரானது பாம்பின் நாலுகின்ற உரியை ஒக்கும் தூய வெள்ளிய அருவியை உடைய மலையின் உயரத்திலே பொருந்தியது; அங்கேயுள்ள தலைவியை நீ பாதுகாப்பாயாக; நீ வாழ்வாயாக!
முடிபு:
வாடை, நல்லோள் ஊர் நண்ணியது; ஓம்புமதி; வாழி.
கருத்து:
மலையின் உச்சியிலே தோன்றுவது தலைவியினதுஊராகும்.






