குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 015

பாலை - செவிலி கூற்று


பாலை - செவிலி கூற்று

பாடல் பின்னணி:

தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றதைத் தோழியால்அறிந்த செவிலி, ‘‘நம் மகளும் அவள் அன்பனும் பாலையைக் கடந்து சென்று இதற்குள் மணம் புரிந்து கொண்டிருப்பர்; அதனால் அவர்களுடைய நட்பு உலகறிய உறுதி பெற்றதாகும்’’ என்று நற்றாய்க்குக் கூறியது.

பறைபடப் பணிலம் ஆர்ப்ப, இறை கொள்பு
தொன் மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன் மொழி போல
வாயாகின்றே தோழி, ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு . . . . [05]

தொகு வளை முன் கை மடந்தை நட்பே.
- ஔவையார்.

பொருளுரை:

தோழி! அழகிய வீரக் கழலை யும் செம்மையாகிய இலையை உடைய வெள்ளிய வேலையும் கொண்ட தலைவனோடு பலவாகத்தொக்க வளைகளைப் பூண்ட முன் கைகளை உடைய நின்மகள் செய்த நட்பானது மிகப்பழைய ஆல மரத்தடியின் கண் உள்ள பொதுவிடத்தில் தங்குதலைக் கொண்டு தோன்றிய நான்கு ஊரில் உள்ள கோசரது நன்மையை உடைய மொழி உண்மையாவதைப் போல முரசு முழங்கவும் சங்கு ஒலிக்கவும் மணம் செய்தலால் உண்மை ஆகியது.

முடிபு:

விடலையொடு மடந்தை நட்பு வாயாகின்று.

கருத்து:

தலைவி தன் தலைவனுடன் சென்றனள்.