குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 108

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

கார்ப்பருவம் வந்தது கண்ட தலைவி, “இன்னும் தலைவர் வந்திலர்; யான் உய்யேன்” என்று வருந்திக் கூறியது.

மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்று வயின் படரப் புறவில்,
பாசிலை முல்லை ஆசில் வான் பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று,
உய்யேன் போல்வல் தோழி, யானே . . . . [05]
- வாயிலான் தேவனார்.

பொருளுரை:

தோழி! மேகங்கள் விளையாடுதற்கிடமாகிய மலையைச் சேர்ந்த சிற்றூரினிடத்து மேயும் பொருட்டு அகன்றிருந்த பசுக்கள் தம் கன்றுகளினிடத்தே நினைந்து செல்ல முல்லை நிலத்தில் பசிய இலைகளையுடைய முல்லையினது குற்றமில்லாத சிறந்த மலர்ப் பரப்பு செக்கர் வானத்தின் அழகைக் கொண்டது; இக் கார்ப்பருவத்து மாலையில் தலைவர் வாராமையின் யான் உயிர் வாழேன்.

முடிபு:

தோழி, முல்லை வான்பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று; யான் உய்யேன்.

கருத்து:

கார்ப்பருவம் வந்துவிட்டது; தலைவர் பிரிவை இனிப் பொறுத்திரேன்.