குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 223
குறிஞ்சி - தலைவி கூற்று
குறிஞ்சி - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் வரைபொருட்குப் பிரிந்த காலத்தில் வற்புறுத்திய தோழிக்கு, “முன் ஒரு கால் நின்சொற் கேட்டுத் தலைவனைக் கண்டு என் நலன் இழந்தேன். நலன் இழந்த புலம்பொடு இப்பொழுதும் கவல்வேனாயினேன்” என்று தலைவி கூறியது.
பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி, அன்று இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல,
தழலும் தட்டையும் முறியும் தந்து, இவை
ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி . . . . [05]
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என்னை கொண்டான், யாம் இன்னமால் இனியே.
செல்வாம் செல்வாம் என்றி, அன்று இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல,
தழலும் தட்டையும் முறியும் தந்து, இவை
ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி . . . . [05]
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என்னை கொண்டான், யாம் இன்னமால் இனியே.
- மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி அன்றிவண்
நல்லோர் நல்ல பலவாற் றில்ல
தழலும் தட்டையும் முறியுந் தந்திவை
ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி . . . . [05]
அன்னை யோம்பிய ஆய்நலம்
என்னை கொண்டான்யாம் இன்னமா லினியே.
செல்வாம் செல்வாம் என்றி அன்றிவண்
நல்லோர் நல்ல பலவாற் றில்ல
தழலும் தட்டையும் முறியுந் தந்திவை
ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி . . . . [05]
அன்னை யோம்பிய ஆய்நலம்
என்னை கொண்டான்யாம் இன்னமா லினியே.
பொருளுரை:
தோழி! முன்னொரு நாள் பெரிய ஊரினர் மேற்கொண்ட மிக்க ஆரவாரத்தை உடைய விழாவிற்கு போவோம் போவோமென்று கூறினாய்; அன்று நாம் புறப்படுகையில் இங்கு நல்லோரால் கூறப்பட்ட நல்ல வாய்ச் சொற்களாகிய நிமித்தங்கள் பலவாக இருந்தன; கிளிகடி கருவிகளாகிய தழலையும் தட்டையையும் தழையையும் எனக்குக் கொடுத்து இப் பொருள்கள் உனக்கு ஏற்புடையனஎன்று சொல்லி பின்பு புனைந் துரைகளைக் கூறி நம்முடைய தாய்பாதுகாத்த அழகிய எம் பெண்மை நலத்தை என்னுடைய தலைவன் கொள்ளை கொண்டான் யாம் இப்பொழுது அந்நலன் இழந்த இத்தகையே மாயினோம்.
முடிபு:
செல்வாம் செல்வாம் என்றி; நல்ல பல; நலம் என்னைக் கொண்டான்; யாம் இனி இன்னம்.
கருத்து:
தலைவனால் நலன் இழந்தமை நினைந்து வேறுபட்டேன்.






