குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 033
மருதம் - தலைவி கூற்று
மருதம் - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவனுக்குத் தூதாக வந்த பாணனை ஏற்றுக் கொண்ட தலைவி, “இவன் நன்றாகப் பேசுகின்றான்; இங்கே விருந்து பெறுவான்” என்று உணர்த்தியது.
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்,
தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ?
இரந்து ஊண் நிரம்பா மேனியொடு,
விருந்தின் ஊரும் பெருஞ்செம்மலனே.
தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ?
இரந்து ஊண் நிரம்பா மேனியொடு,
விருந்தின் ஊரும் பெருஞ்செம்மலனே.
- படுமரத்து மோசிகீரனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே.
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே.
பொருளுரை:
தோழியே இப்பாணன் ஓர் இளைய மாணாக்கன்; தனது ஊரில் உள்ள பொதுவிடத்து எத்தகையவனோ? இரந்து பெறும் உணவினால் முற்ற வளராத மேனியொடு புதிதாகப் பெறும் விருந்தின் பொருட்டுச் செல்லும் பெரிய தலைமையை உடையவன்.
முடிபு:
அன்னாய், இவன் இளமாணாக்கன்; என்னன் கொல்லோ? செம்மலன்.
கருத்து:
இவன் இங்கும் விருந்தைப் பெறுவான்.






