குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 301

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில், “நீ ஆற்றும்வன்மை யுடையாயோ?” என வினாவிய தோழிக்கு, “தலைவன்வாராவிடினும், அவன் வருவானென்னும் நினைவினால் நான்துயின்றிலேன்” என்று தலைவி கூறியது.

முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக்
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல்,
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர் . . . . [05]

வாராதுஆயினும், வருவது போலச்
செவிமுதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால் - தோழி! - என் கண்ணே.
- குன்றியனார்.

பொருளுரை:

தோழி! முழவினைப்போன்ற அடி மரத்தையுடைய வளைந்த நிலையையுடைய பனையினது கொழுவிய ஓலையின் கண்ணே இயற்றிய சிறிய சுள்ளிகளாலாகிய கூட்டிலுள்ள கரிய காலையுடைய அன்றிலினது விருப்பத்தையுடைய முதல்சூலினால் உண்டான நோயையுடைய பெண் பறவை ஆண்பறவையை அழைக்கின்ற பாதியிரவில் தனது சக்கரத்தால்மன்றத்தைப் பிளந்து கொண்டு வரும் தொகுதியாகிய மணியையுடைய தலைவனது நெடியதேர் வாராதாயினும்! வருவது போல! காதினிடத்து ஒலிக்கும் ஒலியினால் என்னுடைய கண்கள் தூக்கத்தை நீத்தன.

முடிபு:

தோழி, கங்குலில் தேர் வாராதாயினும் வருவது போல இசைக்கும் அரவமொடு என் கண் துயில் துறந்தன.

கருத்து:

தலைவன் வரவை எதிர்பார்த்துத் துயின்றிலேன்.