குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 316
நெய்தல் - தலைவி கூற்று
நெய்தல் - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
வரைவிடை வேறுபட்ட தன்னை வினவிய தோழிக்கு, "தலைவன் இன்னும் வந்திலன்; என் துன்பத்தை அன்னையறியின் உயிர் நீப்பேன். அங்ஙனம் அறிவாளோவென அஞ்சி வேறுபட்டேன்" என்பது படத்தலைவி கூறியது.
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும்,
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி - தோழி! - விளியாது,
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட, . . . . [05]
ஆய்ந்த அலவன் துன்புறு துணைபரி
ஓங்குவரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி - தோழி! - விளியாது,
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட, . . . . [05]
ஆய்ந்த அலவன் துன்புறு துணைபரி
ஓங்குவரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?
- தும்பிசேர் கீரனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்
நோய்மலி வருத்தம் அன்னை யறியின்
உளெனோ வாழி தோழி விளியா
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை
ஓரை மகளி ரோராங் காட்ட . . . . [05]
வாய்ந்த லவன் துன்புறு துனைபரி
ஓங்குவரல் விரிதிரை களையும்
துறைவன் கொல்லோ பிறவா யினவே.
நோய்மலி வருத்தம் அன்னை யறியின்
உளெனோ வாழி தோழி விளியா
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை
ஓரை மகளி ரோராங் காட்ட . . . . [05]
வாய்ந்த லவன் துன்புறு துனைபரி
ஓங்குவரல் விரிதிரை களையும்
துறைவன் கொல்லோ பிறவா யினவே.
பொருளுரை:
தோழி! கெடாமல் வலியையுடைய கடலால் அலைக்கப்பட்ட மணல் விராவிய அடைகரையினிடத்து விளையாட்டையுடைய பெண்கள் ஒரு தன்மையாக அலைக்க மெலிந்த நண்டினது வருத்தம் மிக்க விரைந்த செலவை உயர்ந்து வருதலையுடைய விரிந்த அலைஅந்நண்டைக் கொண்டு சென்று நீக்குகின்ற துறையையுடைய தலைவன் சொல்! வேறுபாடுடையனவாயின; அழகியவளைகள் நெகிழ்ந்து போகவும் அயர்வினை மெய்யின்கண்ணே நிலைக்கச் செய்யவும் துன்பமிக்க எனது வருத்தத்தை தாய் அறிவாளாயின் இனி மேலும் உயிரோடு இருப்பேனாவேனோ?
முடிபு:
தோழி, துறைவன் சொல் பிற ஆயின; வருத்தம் அன்னை அறியின் உளெனோ?.
கருத்து:
தலைவன் வாராமையால் துன்புற்ற என் நிலையைத் தாய்அறியின் யான் உயிர் நீப்பேன்.






