குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 016

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘அவர் நம்மை நினைப்பாரோ, நினையாரோ’ என்று கருதிக் கவலையுற்ற தலைவியை நோக்கி, "அவர் சென்ற பாலை நிலத்தில் ஆண் பல்லி பெண் பல்லியை அழைத்தலைக் கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்" என்று கூறி ஆற்றுவித்தது.

உள்ளார் கொல்லோ தோழி, கள்வர் தம்
பொன் புனை பகழி செப்பம் கொண்மார்
உகிர் நுதி புரட்டும் ஓசை போலச்,
செங்கால் பல்லி தன் துணை பயிரும்,
அம் கால் கள்ளியங்காடு இறந்தோரே? . . . . [05]
- சேர மன்னன் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

பொருளுரை:

தோழி! ஆறலை கள்வர் செப்பஞ் செய்யும் பொருட்டு இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை நக நுனியிலே புரட்டுதலால் உண்டாகிய ஒலியைப் போல செம்மையாகிய காலை உடைய ஆண் பல்லியானது தன் துணையாகிய பெண் பல்லியை அழைத்தற்கு இடமாகிய அழகிய அடியை உடைய கள்ளிகளை உடைய பாலையைக் கடந்து பொருள்வயிற் சென்ற தலைவர் நம்மை நினையாரோ?

முடிபு:

தோழி, காடிறந்தோர் உள்ளார்கொல்?

கருத்து:

தலைவர் விரைவில் வந்து விடுவர்.