குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 054

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரையாமல் நெடுங்காலம் வந்து பழகுங் காலத்தில் அங்ஙனம் பழகுதலினால் உண்டாகும் ஏதத்தையறிந்து வருந்திய தலைமகள் தோழியை நோக்கி, "தலைவன் என் பெண்மை நலத்தைக் கொண்டான். இனி அவன் வரைந்து கொண்டாலன்றி அதனைப் பெறேன்" என்றது.

யானே யீண்டையேனே, என் நலனே
ஏனல் காவலர் கவண் ஓலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு, ஆண்டு ஒழிந்தன்றே . . . . [05]
- மீனெறி தூண்டிலார்.

பொருளுரை:

தோழி! இவ்விடத்திலுள்ளேன்; என்னோடு முன்பு ஒன்றியிருந்த எனது பெண்மை நலன் தினைப் புனங் காப்பார் விடும் கவண்கல்லின் ஒலிக்கு அஞ்சி காட்டு யானை கைவிட்ட பசிய மூங்கிலானது மீனைக் கவர்ந்துகொண்ட தூண்டிலைப் போல மேலே செல்லுதற்கு இடமாகிய காட்டையுடைய தலைவனோடு நாங்கள் பழகிய அவ்விடத்தே நீங்கியது.

முடிபு:

யான் ஈண்டையேன்; என் நலன் நாடனொடு ஆண்டு ஒழிந்தன்று.

கருத்து:

தலைவன் பிரிவினால் யான் பெண்மைநலனிழந்தேன்.