குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 215

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி, “உன்னுடைய துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து விடுவார்” என்று தோழி உறுதி கூறியது.

படரும் பைபயப் பெயரும் சுடரும்
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர்
வருவர் கொல், வாழி தோழி! நீர் இல்
வறுங்கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும்பொறை மருங்கின் அமர் துணை தழீஇக் . . . . [05]

கொடுவரி இரும்புலி காக்கும்,
நெடுவரை மருங்கின் சுரன் இறந்தோரே.
- மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்.

பொருளுரை:

தோழி! துன்பமும்மெல்ல மெல்ல நீங்கும்; ஒளி விடுகின்றசூரியன் பெரிய அத்தகிரியின் கண்மறையா நின்றது; ஆதலின் நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய விளங்கிய கொம்புகளை உடைய ஆண் யானைகள் குறிய குண்டுக் கற்களுக்கு அருகில் தாம் விரும்புகின்ற பிடிகளைத் தழுவி வளைந்த கோடுகளை உடைய பெரியபுலி தாக்குதலினின்றும் பாதுகாக்கின்ற உயர்ந்த மலைப் பக்கத்தில் உள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய அத் தலைவர் இன்று வருவர்!; நீ வாழ்வாயாக!

முடிபு:

தோழி, படரும் பெயரும்; என்றூழ் மறையும்; சுரனிறந்தோராகிய அவர் இன்று வருவர்; வாழி!

கருத்து:

தலைவர் இன்று வருவர்.