குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 184

நெய்தல் - தலைவன் கூற்று


நெய்தல் - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தன்னை இடித்துரைத்த பாங்கனை நோக்கி, “சிற்றூரிடத்திற் செல்பவர் யாரும் தலைவியின் கண்வலையிற் படுவர்; என் நெஞ்சம் அதிற்பட்டது”என்று கூறியது.

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கு இது மாண்டது என்னாது அதன் பட்டு
ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம்
மயில் கண் அன்ன மாண் முடிப் பாவை . . . . [05]

நுண் வலைப் பரதவர் மடமகள்
கண் வலைப்படூஉம் கானலானே.
- ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்.

பொருளுரை:

மயிலினது பீலிக்கண்ணைப் போன்ற மாட்சிமைப்பட்ட முடியையுடைய பாவை போல்வாளாகிய நுண்ணிய வலையையுடைய நெய்தனிலமாக்களுடைய மடமையையுடைய மகளது கண்வலையின் கண் ஆண்டுச் செல்வார் அகப்படுகின்ற கடற்கரைச் சோலையினிடத்து எனது மாட்சிமைப்பட்ட தகுதியையுடையநெஞ்சம் இப்பொருளுக்குஇப்பொருள் ஏற்ற மாட்சியை யுடையது என்று ஆராயாமல் அக்கண் வலையின்கண்ணே பட்டு அக்கானலினிடத்தேதங்கியது அறிவான் அமைந்தவர்கட்கு தாம் கண்டறிந்ததொன்றைமறைத்துப் பொய்க்கரி கூறும் இயல்பு இல்லை; ஆதலின்யாம் கண்டறிந்த இதனை உண்மையாகக் கொள்க; அச்சிற்றூரினிடத்துச் செல்லுதலை அடைதலைப் பரிகரிமின்.

முடிபு:

கானலான் நெஞ்சம் ஒழிந்தன்று; அறிகரி பொய்த்தல்ஆன்றோர்க் கில்லை; குறுகல் ஓம்புமின்.

கருத்து:

நீவிர் ஆண்டுச் சென்றால் இங்ஙனம் கழறீர்.