குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 107
மருதம் - தலைவி கூற்று
மருதம் - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
பொருள்வயிற் பிரிந்த தலைவன் மீண்டு வரப்பெற்று அவனோடு இன்புற்ற தலைவி பொழுது புலர்ந்தமையால் துயருற்று, “எம்மைத் துயிலினின்றும் எழுப்பிய சேவலே! நீ இறந்து படுவாயாக” என்று கூறித் தன் காமமிகுதியைப் புலப்படுத்தியது.
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந்நெற்றிக் கணங் கொள் சேவல்!
நள் இருள் யாமத்தில் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகிக்
கடு நவைப் படீஇயரோ நீயே, நெடு நீர் . . . . [05]
யாணர் ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே.
தொகு செந்நெற்றிக் கணங் கொள் சேவல்!
நள் இருள் யாமத்தில் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகிக்
கடு நவைப் படீஇயரோ நீயே, நெடு நீர் . . . . [05]
யாணர் ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே.
- மதுரைக் கண்ணனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன
தொகுசெ நெற்றிக் கணங்கொள் சேவல்
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்
கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர் . . . . [05]
யாண ரூரன் றன்னொடு வதிந்த
ஏம வின்றுயி லெடுப்பி யோயே
தொகுசெ நெற்றிக் கணங்கொள் சேவல்
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்
கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர் . . . . [05]
யாண ரூரன் றன்னொடு வதிந்த
ஏம வின்றுயி லெடுப்பி யோயே
பொருளுரை:
குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளினது ஒள்ளிய பூவைப் போன்ற தொக்க சிவந்த கொண்டையையுடைய கூட்டங்கொண்ட சேவலே ஆழமாகிய நீரினால் உண்டாகும் புது வருவாயையுடைய ஊரையுடைய தலைவனோடு தங்கிய இன்பத்தைத் தரும் இனிய துயிலினின்றும் எம்மை எழுப்பினை; நீ செறிந்த இருளையுடைய இடையிரவின் கண் வீட்டிலுள்ள எலிகளை உண்ணும் பொருட்டு ஆராயும் காட்டுப் பூனையின் குட்டிக்கு சிலநாள் இட்டு வைத்துண்ணும் உணவாகி மிக்க துன்பத்தை அடைக.
முடிபு:
சேவல், துயில் எடுப்பியோய்; நீ கடுநவைப்படீஇயர்.
கருத்து:
பொழுது புலர்ந்தமையால் நான் துன்புறுவேனாயினேன்.






