குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 004

நெய்தல் - தலைமகள் கூற்று


நெய்தல் - தலைமகள் கூற்று

பாடல் பின்னணி:

பிரிவாற்றாமல் வருந்துகின்றாள் என்று கவலையுற்ற தோழிக்கு, 'தலைவன் முன்பு எனக்குச் செய்த தண்ணளியை நினைந்து ஆற்றினேன்' என்பது புலப்படக் கூறியது.

நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே,
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்,
அமைவிலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே.
- காமஞ்சேர் குளத்தார்.

பொருளுரை:

எனது நெஞ்சம் வருந்தா நிற்கும் இமைகளைத் தீயச் செய்யும் கருவியைப் போன்ற வெம்மையைஉடைய எனது கண்ணீரைத் தாம் துடைத்து அளவளாவுவதற்கு அமைந்த நம் தலைவர் இப்பொழுது மனம் பொருந்தாரய்ப் பிரிந்திருத்தலால் எனது நெஞ்சம் வருந்தா நிற்கும்.

முடிபு:

காதலர் அமைவிலராகுதலால் நெஞ்சு நோவா நிற்கும்.

கருத்து:

தலைவர் இப்பொழுது உடனிராமையால் என் நெஞ்சு வருந்தும்.