குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 041
பாலை - தலைவி கூற்று
பாலை - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் மேனியிற் பொலிவழிந்த வேறுபாடு கண்டு கவலையுற்ற தோழியை நோக்கி, “தலைவர் உடனிருப் பின் நான் மகிழ்வுற்று விளங்குவேன்; பிரியின் பொலிவழிந்தவளாவேன்” என்று கூறியது.
காதலர் உழையராகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற,
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பு இல் போலப் புல்லென்று . . . . [05]
அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே.
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற,
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பு இல் போலப் புல்லென்று . . . . [05]
அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே.
- அணிலாடு முன்றிலார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
காதல ருழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென் . . . . [05]
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென் . . . . [05]
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.
பொருளுரை:
தோழி! தலைவர் பக்கத்தவராக இருப்ப மிக மகிழ்ச்சியுற்று விழாக்கொண்ட ஊரினர் மகிழ்வதைப் போல நிச்சயமாக விரும்பி மகிழ்வேன்; அவர் என்னைப் பிரிந்து சென்ற காலத்தில் பாலைநிலத்திற் பொருந்திய அழகிய குடியையுடைய சிறிய ஊரில் மனிதர் நீங்கிச் சென்ற அணில் விளையாடுகின்ற முற்றத்தையுடைய தனிமையுள்ள வீட்டைப்போல பொலிவழிந்து வருந்துவேன்.
முடிபு:
தோழி, காதலர் உழையராகப் புகல்வேன்; அவர் அகன்ற ஞான்று அலப்பென்.
கருத்து:
தலைவர் பிரிந்தமையின் வருத்தமுடையேனாயினேன்.






