குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 179
குறிஞ்சி - தோழி கூற்று
குறிஞ்சி - தோழி கூற்று
பாடல் பின்னணி:
பகலில் வந்து தலைவியோடு அளவளாவிய தலைவனை நோக்கி,“எம் ஊருக்கு வந்து இரவில் தங்கிச் செல்வாயாக” என்று தோழி கூறியது.
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,
எல்லும் எல்லின்று, ஞமலியும் இளைத்தன,
செல்லல் ஐஇய, உது எம் ஊரே,
ஓங்கு வரை அடுக்கத்துத் தீந்தேன் கிழித்த,
குவை உடைப் பசும் கழை தின்ற கயவாய்ப் . . . . [05]
பேதை யானை சுவைத்த,
கூழை மூங்கில் குவட்டு இடை அதுவே.
எல்லும் எல்லின்று, ஞமலியும் இளைத்தன,
செல்லல் ஐஇய, உது எம் ஊரே,
ஓங்கு வரை அடுக்கத்துத் தீந்தேன் கிழித்த,
குவை உடைப் பசும் கழை தின்ற கயவாய்ப் . . . . [05]
பேதை யானை சுவைத்த,
கூழை மூங்கில் குவட்டு இடை அதுவே.
- குட்டுவன் கண்ணனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
கல்லென் கானத்துக் கடமா வாட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன
செல்லல் ஐஇய உதுவெம் மூரே
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப் . . . . [05]
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன
செல்லல் ஐஇய உதுவெம் மூரே
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப் . . . . [05]
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.
பொருளுரை:
ஐய! கல்லென்னும்ஆரவாரத்தையுடைய காட்டின் கண் கடமாவை நீ அலைப்ப பகற் பொழுதும்மங்கியது; நாய்களும் நின்னுடன்வேட்டையாடி இளைப்பை அடைந்தன; போகற்க; உயர்ந்த மலைப்பக்கத்தில் இனிய தேனிறாலைக்கிழித்த கூட்டமாகிய பசிய மூங்கில்களின்குருத்தைத் தின்ற ஆழ்ந்த வாயையுடைய பேதைமையையுடைய யானை தின்றதனாற் கூழையாகிய மூங்கிலையுடைய உச்சியின் இடையே உள்ளதாகிய அஃது எமது ஊராகும்.
முடிபு:
ஐய, எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன; செல்லல்;குவட்டிடையதுவாகிய; உது எம் ஊர்.
கருத்து:
இரவில் எம்முடைய ஊருக்கு வந்து தங்கிச் செல்வாயாக.






