குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 011

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைமகனைப் பிரிந்திருக்கும் தலைவி, ‘‘நெஞ்சே, தலைவர் வாராமையின் உடம்பு மெலிந்தது; துயிலையும் ஒழிந்தேன்; துயர் மிகுதியால் அழுவேன்; இங்ஙனம் இங்கிருந்து துயருறுதலைக் காட்டிலும் அவர் இருக்கும் இடத்திற்குச் செல்லுதல் நலம்’’ என்று தோழி கேட்கும்படி நெஞ்சை நோக்கிக் கூறுவாளாய்த் தனது துயர மிகுதியைப் புலப்படுத்தியது.

கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ நாடொறும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே,
எழு இனி, வாழி என் நெஞ்சே, முனாது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது . . . . [05]

பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.
- மாமூலனார்.

பொருளுரை:

எனது நெஞ்சே நீ வாழ்வாயாக! சங்கினை அறுத்துச் செய்யப்பட்டு விளங்கும் கைவளை உடல் மெலிவினால் நெகிழா நிற்ப நாள்தொறும் இமை பொருந்துதல்இல்லாதனவாகிக் கலங்கியழும் கண்ணோடு தனித்து வருந்தி இப்படி இங்கே தங்குதலில் இருந்து தப்புவேமாக; தலைவர் இருக்கும் இடத்திற்கு செல்லஇப்பொழுது எழுவாயாக; முன்னே உள்ளதாகிய கஞ்சங் குல்லையாலாகிய கண்ணியை அணிந்த வடுகருக்குரிய இடத்தினதாகிய பல வேலையுடைய கட்டி என்பவனுடைய நல்ல நாட்டிற்கு அப்புறத்தில் உள்ள மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவரேனும் அவருடைய நாட்டினிடத்து செல்லுதலை எண்ணினேன்.

முடிபு:

நெஞ்சே, உய்குவம்; எழு நாட்டு வழிபடல் சூழ்ந்திசின்.

கருத்து:

தலைவரைப் பிரிந்து தனித்திருத்தலை இனி ஆற்றேன்.