குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 024
முல்லை - தலைவி கூற்று
முல்லை - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
பிரிந்த தலைவன் மீண்டுவருவேன் என்று சொல்லிய இளவேனிற் பருவத்தைக் கண்ட தலைவி, “தலைவர் பிரிவினால் எனக்கு உண்டாகிய வேறுபாடுகளைக் கண்டு ஊரார் பழி கூறுகின்றனர். அது தீர அவர் இன்னும் வந்திலர்” என வருந்திக் கூறியது.
கருங்கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவது கொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழையக் கொடியோர் நாவே . . . . [05]
காதலர் அகலக் கல்லென்றவ்வே.
என்னை இன்றியும் கழிவது கொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழையக் கொடியோர் நாவே . . . . [05]
காதலர் அகலக் கல்லென்றவ்வே.
- பரணர்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே . . . . [05]
காதல ரகலக் கல்லென் றவ்வே.
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே . . . . [05]
காதல ரகலக் கல்லென் றவ்வே.
பொருளுரை:
கரிய தாளை உடைய வேப்ப மரத்தின் ஒள்ளிய பூவின் புதுவருவாயானது என்னுடைய தலைவன் இல்லாமலும் செல்வதுவோ? அயலாராகிய கொடிய மகளிருடைய நாக்கள் என் காதலர் என்னை நீங்கிச் செல்ல ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த வெள்ளிய கொம்புகளை உடைய அத்தி மரத்தினது உண்ண விரும்பிய ஏழு நண்டுகளால் மிதிக்கப்பட்ட ஒற்றைப் பழமானது குழைவது போல நான் வருந்தும்படி அலர்கூறிக் கல்லென்று முழங்கின.
முடிபு:
ஒண்பூ யாணர் கழிவது கொல்லோ? காதலர் அகலுதலால் குழையக் கொடியோர்களின் யா கல்லென்றன.
கருத்து:
தலைவர் வாராமையின் ஊரினர் பழி கூறுதல் அடங்கவில்லை.






