குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 009
மருதம் - தோழி கூற்று
மருதம் - தோழி கூற்று
பாடல் பின்னணி:
பரத்தையிற் பிரிந்து மீண்ட தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவிடத்துத்தோழி, "தலைவனது பரத்தைமையாகிய கொடுமையால் துன்புறுபவளாயினும்தலைவி அவன் செய்த குற்றத்திற்குத் தான் நாணி எமக்கும் அறிவியாமல் மறைத்துக் கற்பொழுக்கத்திற் சிறப்புற்றிருக்கின்றாள்; ஆதலின் சினந்திலள்” என்று கூறுமுகத்தால் தலைவியைக் கண்டு மகிழ்தல் இயலும் என்பதைத் தலைவனுக்குப் புலப்படுத்தியது.
யாய் ஆகியவளே மாயோளே,
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே,
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இன மீன் இருங்கழி ஓதம் மல்குதொறும் . . . . [05]
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை,
நம் முன் நாணிக் கரப்பாடும்மே.
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே,
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இன மீன் இருங்கழி ஓதம் மல்குதொறும் . . . . [05]
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை,
நம் முன் நாணிக் கரப்பாடும்மே.
- கயமனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும் . . . . [05]
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே.
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும் . . . . [05]
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே.
பொருளுரை:
இயல்பாகவே மாமை நிறத்தை உடையவளாகிய தலைவி இப்பொழுது மூட்டு வாயால் மாட்சிமைப் பட்ட செப்பினுள் இட்டு அடைப்பத் தனித்தனவாகிவைகிய சூடப்படாத பூக்களைப் போல உடல் மெலிந்தாள்; பசுமையாகிய இலைக்கு மேலேஉயர்ந்து தோன்றும் திரட்சியை உடைய காம்பைஉடைய நெய்தல் பூவானது கூட்டமாகிய மீன்களைஉடைய கரிய கழியின்கண் வெள்ளம் அதிகரிக்குந்தோறும் ஆழமான குளத்தில்முழுகும் மகளிரது கண்ணை ஒத்தற்கு இடமாகிய தண்ணிய துறையை உடைய தலைவனது கொடுமையை நம் முன்னே சொல்லுதற்கு நாணமுற்று மறைத்தலை உடைய சொற்களைச் சொல்லுகின்றாள்; ஆதலின் கற்புக்கடம் பூண்டவளானாள்.
முடிபு:
மாயோள் மெய் சாயினள்; துறைவன் கொடுமை நாணிக் கரப்பாடும்; ஆதலின் அவள் யாயாகியள்.
கருத்து:
தலைவனது கொடுமையைத் தலைவி மறந்து அவனைஏற்றுக் கொள்வாள்.






