குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 202
மருதம் - தலைவி கூற்று
மருதம் - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்குத் தூதாகவந்த தோழியைநோக்கி, “தலைவர் இப்பொழுது எனக்கு இன்னாமையைத் தரும் ஒழுக்கத்தினராதலின் என் நெஞ்சு வருந்தும்; அவரை ஏற்றுக் கொள்ளேன்” என்று தலைவி கூறியது.
நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே,
புன்புலம் அமன்ற சிறி இலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முள் பயந்தாங்கு,
இனிய செய்த நம் காதலர்,
இன்னா செய்தல், நோம் என் நெஞ்சே . . . . [05]
புன்புலம் அமன்ற சிறி இலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முள் பயந்தாங்கு,
இனிய செய்த நம் காதலர்,
இன்னா செய்தல், நோம் என் நெஞ்சே . . . . [05]
- அள்ளூர் நன்முல்லையார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே . . . . [05]
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே . . . . [05]
பொருளுரை:
தோழி! என் நெஞ்சுவருந்தும்; முல்லைநிலத்தின் கண் நெருங்கி முளைத்த சிறிய இலைகளையுடைய நெருஞ்சியினது முன்னர்த் தோன்றிக் கண்ணுக்குஇனிய புதியமலர் பின்னர் இன்னாமையைத்தரும் முள்ளைத் தந்தாற்போல முன்பு நமக்கு இனியவற்றைச் செய்தொழுகிய நம் தலைவர் இப்பொழுது இன்னாதனவற்றைச் செய்தொழுகு தலால் என் நெஞ்சு நோம்!
முடிபு:
என் நெஞ்சு நோம்; என் நெஞ்சு நோம்; நம் காதலர் இன்னா செய்தலால் என் நெஞ்சு நோம்.
கருத்து:
தலைவர் இன்னாராகி ஒழுகுதலால் என் நெஞ்சம் வருந்தும்.






