குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 013
குறிஞ்சி - தலைவி கூற்று
குறிஞ்சி - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
பாங்கியிற் கூட்டத்தின் பின் பிரிவாற்றாமல் வருந்திய தன் வேறுபாடுகளை உணர்ந்து கவன்ற தோழியை நோக்கி, "தலைவரது பிரிவினால்எனது உள்ளம் நோய் கொண்டது; கண்களும் அழகிழந்து பசலையை அடைந்தன" என்று தலைவி கூறி ஆற்றாமைக்குக் காரணத்தைப் புலப்படுத்தியது.
மாசுஅறக் கழீஇய யானை போலப்,
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்,
நோய் தந்தனனே தோழி!
பசலை ஆர்ந்த, நம் குவளை அம் கண்ணே . . . . [05]
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்,
நோய் தந்தனனே தோழி!
பசலை ஆர்ந்த, நம் குவளை அம் கண்ணே . . . . [05]
- கபிலர்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்
பைத லொருகலை சேக்கு நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை யார்ந்தநங் குவளையங் கண்ணே . . . . [05]
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்
பைத லொருகலை சேக்கு நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை யார்ந்தநங் குவளையங் கண்ணே . . . . [05]
பொருளுரை:
தோழி! மேலே உள்ள புழுதி முற்ற நீங்கும்படி பாகனால் கழுவப்பட்ட யானையைப் போல பெரிய மழையை ஏற்றுத் தூய்மையுற்ற பெரிய சருச்சரையை உடைய துறு கல்லானது பசுமையை உடைய ஓரிடத்தில் தங்குகின்ற மலை நாட்டை உடைய தலைவன் காம நோயைத் தந்தான்; அதனால் முன்பு குவளை மலரைப் போன்று இருந்த என்னுடைய அழகிய கண்கள் இப்பொழுது பசலை நிறம் நிரம்பப் பெற்றன.
முடிபு:
தோழி, நாடன் நோய் தந்தனன்; அதனால் என் கண்கள் பசலையார்ந்தன.
கருத்து:
தலைவன் பிரிவினால் வேறுபாடுகள் உண்டாயின.






