குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 196
மருதம் - தோழி கூற்று
மருதம் - தோழி கூற்று
பாடல் பின்னணி:
ஊடியிருந்த தலைவியின் உடம்பாடு பெறுவதற்குத்துணை புரியும்வண்ணம் தலைவன் தோழியை வேண்டியபொழுது, “நீர் முன்பு எம்தலைவிபால் அன்புடையராயினீர்; இப்பொழுது அதனை நீங்கினீர்;ஆதலின் நும்மை ஏற்றுக் கொள்ளுமாறு எங்ஙனம்?” என்பது பட அவள்கூறியது.
வேம்பின் பைங்காய் என் தோழி தரினே,
தேம்பூங் கட்டி என்றனிர்! இனியே,
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
வெய்ய உவர்க்கும் என்றனிர் . . . . [05]
ஐய! அற்றால் அன்பின் பாலே!
தேம்பூங் கட்டி என்றனிர்! இனியே,
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
வெய்ய உவர்க்கும் என்றனிர் . . . . [05]
ஐய! அற்றால் அன்பின் பாலே!
- மிளைக் கந்தனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர் . . . . [05]
ஐய அற்றால் அன்பின் பாலே.
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர் . . . . [05]
ஐய அற்றால் அன்பின் பாலே.
பொருளுரை:
ஐய! என் தோழியாகியதலைவி வேம்பினது பசிய காயை முன்பு தந்தால் இனிய பொலிவுபெற்ற வெல்லக்கட்டி என்று பாராட்டிக் கூறினீர்; இப்பொழுது பாரி யென்னும்வள்ளலுக்குரிய பறம்பென்னும் மலையிடத்திலுள்ள தை மாதத்திற் குளிர்ந்தனவாகிய குளிர்ச்சியையுடைய சுனையிலுள்ளதெளிந்த நீரைத் தந்தாலும் வெப்பத்தையுடையனவாகி உவர்ப்புச் சுவையைத்தருமென்று கூறினீர்; நுமது அன்பின் பகுதி அத்தகையது.
முடிபு:
ஐய, என் தோழி வேம்பின்காய் தரின் கட்டி என்றனிர்;இனி, தண்ணிய தரினும் வெய்ய வுவர்க்கு மென்றனிர்; அன்பின்பால் அற்று.
கருத்து:
முன்பு நீர் தலைவிமாட்டு அன்புடையராயிருந்து இப்போது அவ்வன்பு இல்லீராயினீர்.






