குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 010
பாலை - தோழி கூற்று
பாலை - தோழி கூற்று
பாடல் பின்னணி:
பரத்தையிற் பிரிந்த தலைவன் மீண்டு வந்து வாயில் வேண்டியஇடத்துத் தோழி, "ஏற்றுக் கோடற்குத் தகாத கொடுமையை உடையனாயினும் அதனை மனங்கொள்ளாமல், கற்பொழுக்கத்தின் சிறப்பினால்தலைவன் கொடுமையை மறைத்து அவன் நாணும்படி தலைவி தானேஅவனை ஏற்றுக் கொள்ள வருகின்றாள்" என்று கூறியது.
யாய் ஆகியளே விழவு முதலாட்டி,
பயறு போல் இணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூமென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள், ஆகலின் நாணிய வருமே . . . . [05]
பயறு போல் இணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூமென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள், ஆகலின் நாணிய வருமே . . . . [05]
- ஓரம்போகியார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலி னாணிய வருமே . . . . [05]
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலி னாணிய வருமே . . . . [05]
பொருளுரை:
தலைவியாயவள் தலைவன் செல்வம் பெற்று மகிழ்ந்து குலாவு வதற்குக் காரணமாக உள்ளாள்; பயற்றின் கொத்தைப் போன்ற பூங்கொத்தில் உள்ளன வாகிய பசிய பூந்தாதுக்கள் தங்கள் மேலே படும்படி உழவர்கள் வளைத்த கமழ்கின்ற பூக்களை உடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட காஞ்சி மரத்தை உடைய ஊரனது கொடுமையை நாம் தெரிந்து கொள்ளாதபடி மறைத்தாள் ஆதலின் அவன் நாணும்படி எதிர்கொள்ள வருகின்றாள்.
முடிபு:
விழவு முதலாட்டி, தலைவனது கொடுமையை வெளி யிடாமல் மறைத்தாளாதலால் அவன் நாணும்படி வாரா நின்றாள்.
கருத்து:
தலைவி தலைவனது கொடுமையை மறைத்து அவனை ஏற்றுக் கொள்வாளாயினாள்.






