குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 062
குறிஞ்சி - தலைவன் கூற்று
குறிஞ்சி - தலைவன் கூற்று
பாடல் பின்னணி:
இயற்கைப்புணர்ச்சிக்கண் தலைவியோடு அளவளாவிய தலைவன் பிற்றைநாளில் முதல்நாட் கண்ட இடத்தில் அவளைத் தலைப்பட்டு இன்புற எண்ணித் தன் நெஞ்சை நோக்கி, "அவள் நறுமையும் மென்மையும் நன்னிறமும் உடையள்; இன்றும் அவளைப் பெறுவேம்" என்று கூறியது.
கோடல் எதிர் முகைப் பசு வீ முல்லை
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது, முயங்கற்கும் இனிதே . . . . [05]
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது, முயங்கற்கும் இனிதே . . . . [05]
- சிறைக்குடி ஆந்தையார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோண் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே . . . . [05]
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோண் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே . . . . [05]
பொருளுரை:
நெஞ்சே! காந்தள் மலரையும் தோற்றிய அரும்பிலிருந்து உண்டாகிய செவ்வி மலர்களாகிய முல்லைப்பூக்களையும் மணக்கின்ற இதழ்களையுடைய குவளைமலர்களோடு இடையிடையே பொருந்தும்படி கலந்து அழகிதாகத் தொடுத்தல் மாட்சிமைப்பட்ட மாலையைப்போல நறு நாற்றத்தையுடைய தலைவியது மேனியானது தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது; தழுவுதற்கும் இனியது.
முடிபு:
நெஞ்சே, நல்லோளது நறிய மேனி முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிது.
கருத்து:
தலைவியை முன்பு தழுவி இன்புற்றதுபோல இப்பொழுதும் இன்புறுவேன்.






