குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 008
மருதம் - காதற் பரத்தை கூற்று
மருதம் - காதற் பரத்தை கூற்று
பாடல் பின்னணி:
தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின் பக்கத்திலுள்ளார் கேட்கும்படி, “தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே இருந்து விட்டு, தலைவிபாற் சென்றுஅவளுக்கு அடங்கி அவள் மனம்போல் ஒழுகினான்; தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்!" என்று கூறியது.
கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்,
எம் இல் பெருமொழி கூறித், தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல, . . . . [05]
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.
பழன வாளை கதூஉம் ஊரன்,
எம் இல் பெருமொழி கூறித், தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல, . . . . [05]
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.
- ஆலங்குடி வங்கனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடியல் பாவை போல . . . . [05]
மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே.
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடியல் பாவை போல . . . . [05]
மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே.
பொருளுரை:
வயல் அருகில் உள்ள மா மரத்தினது கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தை பொய்கையில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணுதற்கு இடமாகிய ஊரை உடைய தலைவன் எம்முடைய வீட்டில் எம்மை வயமாக்குதற்குரிய பெரு மொழிகளைக்கூறிச் சென்று தம்முடைய வீட்டில் முன்னின்றார் தம் கையையும் காலையும் தூக்க தானும் தூக்குகின்ற கண்ணாடியுள் தோன்றுகின்ற பாவையைப்போல தன்னுடைய மனைவிக்கு அவள் விரும்பியவற்றைச் செய்வான்.
முடிபு:
ஊரன், எம்மிற் பெருமொழி கூறிப் புதல்வன் தாய்க்குத் தம்மில் மேவன செய்வான்.
கருத்து:
தலைவன் தன் மனைவியை அஞ்சி ஒழுகினான்.






