குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 029

குறிஞ்சி - தலைன் கூற்று


குறிஞ்சி - தலைன் கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் இரவுக் குறியை விரும்ப, அதனைத் தோழி மறுத்து, வரைந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பித்தாள்; பின்னும் அவனது நெஞ்சம் இரவுக் குறியை விரும்ப, “நின் குறையை அறிந்து நிறைவேற்றுவார் அரியராகவும், நீ வருந்துதலினாற் பயன் யாது?” என்று அவன் அதனை நோக்கி இரங்கிக் கூறியது.

நல் உரை இகந்து, புல் உரை தாஅய்ப்
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல,
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவா உற்றனை நெஞ்சே, நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு . . . . [05]

மகவுடை மந்தி போல,
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
- ஔவையார்.

பொருளுரை:

நெஞ்சே! நல்ல உரைகள் நீங்கி பயனற்ற உரைகள் பரவப் பெற்று பெய்தலை உடைய மழையின் நீரை ஏற்றுக் கொண்ட சுடப் படாத பசு மண்ணாலாகிய பாண்டத்தைப் போல உள்ளத்தினால் பொறுக்க முடியாத ஆசை வெள்ளத்தில் நீந்தா நின்று பெறுதற் கரியதை பெற விரும்பினை; உயர்ந்த மரக் கொம்பில் உள்ள குட்டியை உடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல மனம் பொருந்த நின் கருத்தைத் தழுவிக் கொண்டு நின் குறையைக் கேட்டு நிறைவேற்றுவாரை பெறுவாயாயின் உனது போராட்டம் மிகவும் பெருமை உடையது.

முடிபு:

நெஞ்சே, நின் பூசல் கேட்குநர்ப் பெறின் பெரிது.

கருத்து:

இனித் தலைவியை இரவில் காண்டல் அரிது.