குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 037
பாலை - தோழி கூற்று
பாலை - தோழி கூற்று
பாடல் பின்னணி:
தலைவனது பிரிவை ஆற்றாத தலைவியை நோக்கி, ‘‘தலைவர் மிக்க அன்புடையர்; அவர் சென்ற பாலைநிலத்தில் களிறு தன் பிடியை அன்போடு பாதுகாத்து நிற்கும் காட்சியைக் கண்டு நின்னைப் பாதுகாக்கும் தம் கடமையை யெண்ணி விரைவில் மீள்வர்’’ என்று கூறித் தோழி ஆற்றுவித்தது.
நசை பெரிது உடையர், நல்கலும் நல்குவர்,
பிடி பசி களைஇய பெருங்கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி, அவர் சென்ற ஆறே.
பிடி பசி களைஇய பெருங்கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி, அவர் சென்ற ஆறே.
- சேர மன்னன் பாலைபாடிய பெருங்கடுங்கோ.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.
பொருளுரை:
தோழி! தலைவர் நின்பால் விருப்பம் மிக உடையவர்; நல்குதலையும் செய்வர்; அவர் போன வழிகள் பெண்யானையினது பசியை நீக்கும்பொருட்டு பெரிய துதிக்கையையுடைய ஆண்யானை மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தின் பட்டையை உரித்து அதன் நீரை அப்பிடி பருகச் செய்யும் அன்பைப் புலப்படுத்தற்கு இடமாக உள்ளன.
முடிபு:
நசை பெரிதுடையர்; நல்குவர்; அவர் சென்ற ஆறு அன்பின.
கருத்து:
தலைவர் விரைவில் மீண்டு வருவர்.






