குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 038
குறிஞ்சி - தலைவி கூற்று
குறிஞ்சி - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் வரைபொருளுக்குப் பிரிந்து நெடுங்காலமாக வாராதிருப்ப, வருந்திய தலைவியை நோக்கித் தோழி, "நின்னை வரைந்து கொள்ளும் பொருட்டன்றோ அவர் பொருளீட்டச் சென்றார்; அங்ஙனமிருப்ப நீ அதனை நன்றென்று கருதாமல் வருந்துவது யாதுகாரணம் பற்றி?" என்று வினாவியபோது, "அவர் பிரிவை ஆற்றும் வன்மை என்பால் இல்லை" என்று தலைவி உணர்த்தியது.
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்று மன், வாழி தோழி! உண்கண்
நீரொடு ஒராங்குத் தணப்ப . . . . [05]
உள்ளாது, ஆற்றல் வல்லுவோர்க்கே.
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்று மன், வாழி தோழி! உண்கண்
நீரொடு ஒராங்குத் தணப்ப . . . . [05]
உள்ளாது, ஆற்றல் வல்லுவோர்க்கே.
- கபிலர்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும்
குன்ற நாடன் கேண்மை யென்றும்
நன்றுமன் வாழி தோழி யுண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப . . . . [05]
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.
வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும்
குன்ற நாடன் கேண்மை யென்றும்
நன்றுமன் வாழி தோழி யுண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப . . . . [05]
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.
பொருளுரை:
தோழி! காட்டிலுள்ள மயிலானது பாறையில் ஈன்ற முட்டைகளை வெயிலில் விளையாடும் முசுவின் குட்டி உருட்டுதற்கு இடமாகிய மலைநாட்டையுடையவனாகிய தலைவனது நட்பு அவன் பிரிய மை தீட்டப்பெற்ற கண்ணினின்று பெருகும் நீரோடு ஒருபடியாக அப்பிரிவை நினைந்து வருந்தாமல் பொறுத்துக்கொள்ளுதலில் வன்மையுடையோர்க்கு மாத்திரம் எக்காலத்தும் மிக நல்லதாகும்.
முடிபு:
குன்றநாடன் கேண்மை ஆற்றல் வல்லுவோர்க்கு என்றும் நன்று.
கருத்து:
தலைவனது பிரிவை ஆற்றும் வன்மையி லேனாயினேன்.






