குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 111
குறிஞ்சி - தோழி கூற்று
குறிஞ்சி - தோழி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் வேலிப்புறத்தானாக அவனுக்குப் புலப்படும்படி தோழி, “நின்மேனியின் வேறுபாடு கண்டு அன்னை வெறியாடத் தொடங்கினாள். அவ் வேறுபாடு நீங்குதற்குரிய வழி வெறியாடலன்றென்பதைத் தாய் அறியும் பொருட்டுத் தலைவன் இங்கே வந்து செல்லுதல் நலம்” என்று தலைவியை நோக்கிக் கூறியது.
மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடு வேள் என்னும் அன்னையும்
அது என உணரும் ஆயின் ஆயிடைக்
கூழை இரு பிடி கை கரந்துஅன்ன
கேழ் இரு துறுகல் கெழு மலை நாடன் . . . . [05]
வல்லே வருக தோழி நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே
வென்றி நெடு வேள் என்னும் அன்னையும்
அது என உணரும் ஆயின் ஆயிடைக்
கூழை இரு பிடி கை கரந்துஅன்ன
கேழ் இரு துறுகல் கெழு மலை நாடன் . . . . [05]
வல்லே வருக தோழி நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே
- தீன்மதி நாகனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
மென்றோ ணெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவே ளென்னு மன்னையும்
அதுவென வுணரு மாயி னாயிடைக்
கூழை யிரும்பிடிக் கைகரந் தன்ன
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் . . . . [05]
வல்லே வருக தோழிநம்
மில்லோர் பெருநகை காணிய சிறிதே.
வென்றி நெடுவே ளென்னு மன்னையும்
அதுவென வுணரு மாயி னாயிடைக்
கூழை யிரும்பிடிக் கைகரந் தன்ன
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் . . . . [05]
வல்லே வருக தோழிநம்
மில்லோர் பெருநகை காணிய சிறிதே.
பொருளுரை:
தோழி! நின் மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம் வெறியாட்டாளன் வெற்றியையுடைய நெடிய முருகக் கடவுளால் வந்ததென்று சொல்லுவான்; நம் தாயும் அதுவென்றே நினைப்பாளாயின் அப்பொழுது குறிய கருமையான பெண் யானையினது கை மறைந்தாற் போன்றல கரிய நிறத்தையுடைய பெரிய குண்டுக்கல் பொருந்திய மலைநாட்டையுடைய தலைவன் நம் வீட்டிலுள்ளாரது பெரிய நகைக்கிடமான செய்கையைக் காணும் பொருட்டு சிறிது நேரம் இங்கே விரைந்து வந்து செல்வானாக.
முடிபு:
தோழி, செல்லலை வேலன் நெடுவேளென்னும்; அன்னையும் அதுவென உணருமாயின், மலைநாடன் காணிய சிறிது வல்லே வருக.
கருத்து:
தாய் நின் வேறுபாடு கண்டு வெறியெடுத்தலைத் தலைவன் அறிவானாக.






