குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 173

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பாங்கியிற் கூட்டத்தின்கண் தலைவன் தோழியிடம் குறையிரப்ப அவள் மறுத்தாளாக, “இனி மடலேறும் பரிகார மொன்று இருத்தலால், அது செய்ய நினைந்து நான் செல்கின்றேன்” என்று அவன் கூறியது.

பொன் நேர் ஆவிரைப் புது மலர் மிடைந்த
பன் நூல் மாலைப் பனைபடு கலி மாப்
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு,
அழிபடர் உள் நோய் வழி வழி சிறப்ப,
“இன்னள் செய்தது இது” என, முன் நின்று . . . . [05]

அவள் பழி நுவலும் இவ்வூர்,
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளெனே.
- மதுரைக் காஞ்சிப்புலவன்.

பொருளுரை:

பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக்கட்டிய பலவாகிய நூல்களையுடைய மாலைகளை அணிந்த பனங்கருக்கால் உண்டாக்கப்பட்ட மனச் செருக்கையுடைய குதிரையை அதன் கழுத்திற் பூட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து நாணத்தைத் தொலைத்து மிக்க நினைவையுடைய உள்ளத்தேயுள்ள காமநோய் மேலும் மேலும் மிகுதியாக இன்னாளால் உண்டாக்கப்பட்டது இக்காம நோயென்று யான் கூற அக்கோலத்தைக் கண்ட இவ்வூரி லுள்ளார் எல்லோர்க்கும் முன்னே நின்று தலைவியினது பழியைக் கூறுவர். அங்ஙனம் உள்ளதொரு பரிகாரத்தை அறிந்திருத்தலால் இவ்விடத் தினின்றும் போகும் பொருட்டு உள்ளேன்.

முடிபு:

கலிமா ஏறி நாண் அட்டு நோய் சிறப்ப இன்னள் செய்தது இதுவென, இவ்வூர் அவள் பழி நுவலும்; ஆங்கு உணர்ந்தமையின் ஏகுமாருளென்.

கருத்து:

நான் இனி மடலேறுவேன்.