குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 186
முல்லை - தலைவி கூற்று
முல்லை - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி துயருறுவாள் என்று வருந்திய தோழியை நோக்கி, “தலைவனை நினைந்து துயிலேன் ஆயினேன்” என்று தலைவி கூறியது.
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த, முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்,
துயில் துறந்தனவால் தோழி, என் கண்ணே.
கொல்லைப் புனத்த, முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்,
துயில் துறந்தனவால் தோழி, என் கண்ணே.
- ஒக்கூர் மாசாத்தியார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
எயிறென முகையும் நாடற்குத்
துயிறுறந் தனவால் தோழியென் கண்ணே.
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
எயிறென முகையும் நாடற்குத்
துயிறுறந் தனவால் தோழியென் கண்ணே.
பொருளுரை:
தோழி! என் கண்கள் மிக்க முழக்கத்தையுடைய இடியேற்றோடு மேகம் மழைபெய்து கலந்த முல்லை நிலத்திலுள்ளனவாகிய மெல்லிய முல்லைக் கொடிகள் பற்களைப் போல அரும்பும் நாட்டையுடையதலைவன் பொருட்டு உறக்கத்தையொழிந்தன.
முடிபு:
தோழி, என்கண் நாடற்குத் துயில் துறந்தன.
கருத்து:
தலைவன் இன்னும் வாராமையின் நான் துயிலொழிந்துவருந்துகின்றேன்.






