குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 218
பாலை - தலைவி கூற்று
பாலை - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, “தலைவர் நம் உயிர்க்கு உயிர் போன்றவர்; அவரைப் பிரிந்து கணப் போதும் பொருந்தும் வன்மையிலேம்; இத்தகைய நம்மை அவர் மறந்து ஆண்டே இருப்பாராயின் அவர் பொருட்டுக் கடவுளைப் பராவுதலும் நிமித்தம் பார்த்தலும் என்ன பயனைத் தரும்?” என்று தலைவி கூறியது.
விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாம், கைந்நூல் யாவாம்,
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்,
உள்ளலும் உள்ளாம், அன்றே தோழி,
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின், தம்மின்று . . . . [05]
இமைப்பு வரை அமையா நம்வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே.
கடனும் பூணாம், கைந்நூல் யாவாம்,
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்,
உள்ளலும் உள்ளாம், அன்றே தோழி,
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின், தம்மின்று . . . . [05]
இமைப்பு வரை அமையா நம்வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே.
- கொற்றனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியு நில்லாம்
உள்ளலு முள்ளா மன்றே தோழி
உயிர்க்குயிர் அன்ன ராகலிற் றம்மின் . . . . [05]
றிமைப்புவரை யமையா நம்வயின்
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே.
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியு நில்லாம்
உள்ளலு முள்ளா மன்றே தோழி
உயிர்க்குயிர் அன்ன ராகலிற் றம்மின் . . . . [05]
றிமைப்புவரை யமையா நம்வயின்
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே.
பொருளுரை:
தோழி! நம் உயிருக்கு உயிரைப் போன்றவராதலின் தம்மை யின்றி இமைப் பொழுது அளவேனும் பிரிந்திருத்தலைப் பொருந்தாத நம்மை மறந்து விட்டுத் தாம் சென்ற அவ்விடத்தே தங்குதலில் வல்ல தலைவர் திறத்தில் பிளப்பையும் குகைகளையும் உடைய மலைப் பக்கத்தில் உள்ள வெற்றி பொருந்திய துர்க்கைக்கு பலிக் கடன் கழித்தலைச் செய்வோம்; கையில் காப்பு நூலைக் கட்டோம்; நிமித்தத்தையும் பாரோம்; நற் சொல்லைக் கேட்டற்குச் சென்று நில்லோம்; நினைத்தலையும் செய்யோம்.
முடிபு:
தோழி, ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டு, கடனும் பூணாம்; யாவாம்; ஓராம்; நில்லாம்; உள்ளாம்.
கருத்து:
நம் அன்பு நிலை தெரிந்து விரைந்து வருதல் தலைவர் கடனாம்.






