குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 244
குறிஞ்சி - தோழி கூற்று
குறிஞ்சி - தோழி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் இரவுக் குறி வந்து ஒழுகா நின்ற காலத்துக் காப்பு மிகுதியால் தலைவியைக் காணப் பெறாமையின், தோழி அதன் காரணம் கூறி வரைவு கடாயது.
பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து
உரவுக் களிறு போல் வந்து இரவுக் கதவு முயறல்
கேளேம் அல்லேம், கேட்டனெம் பெரும,
ஓரி முருங்கப் பீலி சாய
நன் மயில் வலைப் பட்டாங்கு, யாம் . . . . [05]
உயங்கு தொறும் முயங்கும், அறன் இல் யாயே.
உரவுக் களிறு போல் வந்து இரவுக் கதவு முயறல்
கேளேம் அல்லேம், கேட்டனெம் பெரும,
ஓரி முருங்கப் பீலி சாய
நன் மயில் வலைப் பட்டாங்கு, யாம் . . . . [05]
உயங்கு தொறும் முயங்கும், அறன் இல் யாயே.
- கண்ணனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல்
கேளே மல்லேங் கேட்டனெம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம் . . . . [05]
உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே.
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல்
கேளே மல்லேங் கேட்டனெம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம் . . . . [05]
உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே.
பொருளுரை:
தலைவ ஊரில் உள்ளார் பலரும் துயிலும் இருள் செறிந்த இடையிரவின் கண் வலியைஉடைய களிற்றைப் போல வந்து இராக் காலத்தே தாழிட்ட கதவைத் திறக்க முயன்றதனால் உண்டான ஒலியை யாம் கேளேம் அல்லேம்; கேட்டேம்; தலைக்கொண்டை சிதைய தோகை மெலிய நல்ல மயில் வலையின் கண்ணே அகப் பட்டாற் போல யாம் வருந்துந் தோறும் மறமிக்கதாய் எம்மைத் தழுவுவாள்; அதனால் நின் குறிப்பறிந்து நின்பால் வர இயலவில்லை.
முடிபு:
பெரும, கதவம் முயறல் கேளேம் அல்லேம்; கேட்டனம்; யாய் முயங்கும்.
கருத்து:
காவல் மிகுதியால் நின்னைத் தலைவி காண்டல் அரிதாதலின் வரைந்து கோடலே நலம்.






