குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 309
மருதம் - தோழி கூற்று
மருதம் - தோழி கூற்று
பாடல் பின்னணி:
பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனை நோக்கி, “நீ எம்மை அகன்று எமக்கு இன்னாதன செய்யினும் யாம் நினக்கு அன்புடையேமாகி ஒழுகுவேம்” என்று தோழி கூறி வாயில் நேர்ந்தது.
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார்,
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட,
நீடிய வரம்பின் வாடிய விடினும்,
"கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்? என்னாது"
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் . . . . [05]
நின் ஊர் நெய்தல் அனையேம் - பெரும!
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே.
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட,
நீடிய வரம்பின் வாடிய விடினும்,
"கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்? என்னாது"
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் . . . . [05]
நின் ஊர் நெய்தல் அனையேம் - பெரும!
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே.
- உறையூர்ச் சல்லியன் குமாரனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
கைவினை மாக்கடம் செய்வினை முடிமார்
சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட
நீடின வரம்பின் வாடிய விடினும்
கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது
பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும் . . . . [05]
நின்னூர் நெய்த லனையேம் பெரும
நீயெமக், கின்னா தனபல செய்யினும்
நின்னின் றமைதல் வல்லா மாறே.
சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட
நீடின வரம்பின் வாடிய விடினும்
கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது
பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும் . . . . [05]
நின்னூர் நெய்த லனையேம் பெரும
நீயெமக், கின்னா தனபல செய்யினும்
நின்னின் றமைதல் வல்லா மாறே.
பொருளுரை:
தலைவ இன்னாதனவாகிய பல செயல்களைச்செய்தாலும் நின்னைஇன்றிப் பொருந்துதற்கு வன்மையில்லாமையின் யாம் தொழில் புரியும் உழவர் தமது செய்தொழிலை முடிப்பாராகி வண்டு உண்ணும்படிமலர்ந்த மலரின் மணம் கீழே படும்படி நீண்ட வரப்பிலே வாடும்படி விட்டாலும் இவர்கொடியர்; இந்நிலத்தை நீங்கித் தங்குவே மென்றெண்ணாமல் மீட்டும் தம்மைநீக்கிய வயலினிடத்தே மலர்கின்ற நின் ஊரின்கண் உள்ள நெய்தலைப்போன்ற தன்மையையுடையே மாயினேம்.
முடிபு:
பெரும, நீ எமக்கு இன்னாதன செய்யினும், வல்லாமாறு நெய்தல் அனையேம்.
கருத்து:
நின்னையின்றி அமைந்திருத்தல் எமக்கு இயலாமையின்நீ இன்னாதன செய்யினும் நின்னை ஏற்றுக் கொள்வேம்.






