நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 031

நெய்தல்


தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை எதிர்அழிந்தது.

மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால்
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும்
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; . . . . [05]

பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து,
யானும் இனையேன்- ஆயின், ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு . . . . [10]

உலவுத் திரை ஓதம் வெரூஉம்
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.
- நக்கீரனார்.

பொருளுரை:

தோழீ! அமையாமல் வேறுவேறாகிய நாடுகளினின்றும் கலங்களைச் காற்றுச் செலுத்துதலாலே வந்திறுத்த பலவகைப் பண்டங்கள் இறக்கியிட்ட நிலாவை ஒத்த மணற் பரப்பின் கண்ணுள்ள, நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண் குருகு நெடிய புன்னைக்கிளையிலிருக்கின்ற முதிர்ந்த சூலையுடைய வெளிய குருகு; உலாவுதலையுடைய அலையோசைக்கு வெருவா நிற்கும் வலிய நீர்ப்பரப்பினையுடைய கடற்சேர்ப்பனொடு மணவாத முன்பு; கரிய பெரிய நீர்பரந்த கழியிடந்
தெரிதலானே
அதனை நோக்கி: சேஇறா எறிந்த சிறு வெள் காக்கை அதிலுள்ள செய்ய இறாமீனைப் பற்றுதற்குப் பாய்ந்த கழுத்தளவு சிறிது வெண்மையுடைய நீர்க்காக்கை; பரவிய பெரிய குளிர்ச்சியையுடைய கழியிடத்தைத் துழாவியெடுத்துத் தான் விரும்பிய பசிய காலையுடைய பெடையை அழைத்து அதற்குக் கொடா நிற்கும்; சிறிய பூவையுடைய ஞாழலந்துறையும் இனிதேயாயிருந்தது; அவன் என்னைக் கலந்து கைவிட்ட பின்பு அத்துறையும் வெறுப்புடைத்தாயிற்று; ஆதலால் பெரிய வருத்தமுற்ற உள்ளத்தில் அவன் பிரிந்ததனால் ஆகிய துன்பம் பலவற்றையும் நினைந்து யானும் இத்தன்மையே னாயினென்காண்;